தாயாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன்: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜயந்திபுர பிரதேசத்தில் பிரதேசத்தில் தாயார் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (27.09.2023) இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டபோது அதை தடுக்க முற்பட்ட தாயரின் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து அவர்படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமன்றி கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரையும் குடிபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட 4 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam