கார் கதவு கைப்பிடிகளைப் பயன்படுத்த சீன அரசாங்கம் அதிரடியாகத் தடை
மின்சார வாகனங்களில் (EV) அழகிற்காகவும், நவீனத் தோற்றத்திற்காகவும் பயன்படுத்தப்படும் மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிகளைப் பயன்படுத்த சீன அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வடிவமைப்பைத் தடை செய்யும் முதல் நாடாக சீனா மாறியுள்ளது.
கார் வடிவமைப்புகளில் மாற்றம்
சமீபத்தில் சீனாவில் Xiaomi மின்சார கார்கள் விபத்துக்குள்ளானபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கதவுகளைத் திறக்க முடியாமல் பயணிகள் உள்ளேயே சிக்கி உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சீனத் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, எதிர்வரும் 2027 ஜனவரி 1, முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் அனைத்துக் கார்களிலும் கதவின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் (Mechanical Release) வசதி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கைப்பிடிக்கான இடைவெளி குறைந்தபட்சம் 6 செ.மீ நீளம் மற்றும் 2 செ.மீ அகலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், உட்புறம் கதவைத் திறக்கும் முறையை விளக்கும் குறியீடுகள் இருக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
தற்போது சீனாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் (NEV) சுமார் 60 சதவீத கார்கள் இத்தகைய மறைக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்டுள்ளன.
ஏற்கனவே சந்தையில் உள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட கார் வகைகள் இந்த புதிய விதிமுறைக்கு மாற கூடுதலாக இரண்டு ஆண்டுகள் (2029 வரை) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த அதிரடி முடிவு, உலகளாவிய கார் வடிவமைப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri