EV வாகனங்களின் பச்சை நிற தகட்டை ஆராய்ந்த பொலிஸார் - அரசாங்கத்தால் சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப் பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என வாகன சாரதி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவெரியா பகுதியில் பயணத் தடுப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், தமது மின்சார வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிறப் பதிவுத் தகடு தொடர்பில் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிறத் தகடுகள் வழங்கப்படுவது தொடர்பில் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.
போலி வாகன தகடு
அந்தப் பதிவுத் தகடு போலி அல்லது சட்டவிரோதமானதா என்று அவர்கள் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
அத்துடன் அந்தப் பதிவுத் தகடு அதிகாரப்பூர்வமாகமோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்க, தகட்டைப் பெற்றுக்கொள்வதற்காகத் தனக்கு வந்த அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியை (SMS) பொலிஸாரிடம் காட்டி நிலைமை விளக்கமாக எடுத்து கூறினேன்.

இந்தச் சம்பவத்திற்காக தான் பொலிஸ் அதிகாரிகளைக் குறை கூறவில்லை, மாறாக வாகன சாரதிகள் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் பதிவுத் தகடுகளில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உடனுக்குடன் அதிகாரப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமே, எதிர்காலத்தில் பிற மின்சார வாகன உரிமையாளர்கள் தேவையில்லாத அலைச்சல்களையும் சிரமங்களையும் சந்திப்பதைத் தவிர்க்க முடியும் என்றார்.
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாட்டில் பங்கேற்க திமோர்-லெஸ்டே பயணமாகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
YOU MAY LIKE THIS VIDEO