நாமலை அடுத்து வரிசையில் ரணில் மற்றும் கோட்டாபய! அமைச்சர் அதிரடி அறிவிப்பு
மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பு தற்போது எதிர்நோக்கி வரும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் என பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
சட்டம் அனைவருக்கும் சமம்
நிச்சயமாக அது அப்படியல்ல. நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

இந்த அதிகாரத்தின் அடிப்படையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு, இதுவரை 4 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும்போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனிமேல் செல்லுபடியாகாது.

2024 செப்டெம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல, ரணில், மைத்திரி, கோட்டாபய என அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.
நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாடுகளுக்குச் சென்ற சாட்சியங்களைப் பதிசு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்