நாமலை தொடர்ந்து அநுரவிடம் சிக்கவுள்ள சஜித்..! மொட்டுக் கட்சி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் அரசாங்கத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
இலங்கையில் ஜனநாயகத்தை அழித்து, சர்வாதிகார ஆட்சியை நோக்கியும் அரசியல் பழிவாங்கலை நோக்கியும் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளோம்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம்.
ஜெனிவாவில் முறைப்பாடு..
அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுக்கு இணைவாக, செவ்வாய்க்கிழமை இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார அதிகாரத்தைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீதான தாக்கம், மக்கள் எதிர்ப்பு முறையில் அரசியலமைப்பை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைக் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல் என்பனவற்றுக்கே முக்கிய கவனம் செலுத்தப்படும்.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் பழிவாங்கலின் விளைவே.
எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை அடக்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், நாமல் ராஜபக்ச மட்டுமன்றி சஜித் பிரேமதாச மற்றும் திலித் ஜயவீர ஆகியோரும் இதுபோன்ற நியாயமற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
வெளிநாடுகளில் சிக்கிய முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள்! நாமலின் கைதி பின்னணியில் ஏமாற்றப்படும் மக்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam