நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

Sri Lanka Police Nuwara Eliya Death
By Malaivanjan Sep 05, 2026 11:12 PM GMT
Report

நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்கள்

நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி | Two Youths Drowned Nanu Oya S Glasso Waterfall

உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கியதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை கண்டறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணை

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி | Two Youths Drowned Nanu Oya S Glasso Waterfall

இதேவேளை, மலைநாட்டுப் பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில் மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் வாய்ப்பு

இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் வாய்ப்பு

நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த

நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US