பொதுமக்களுக்கு ஒரு சட்டம் அரசியல் தலைவர்களுக்கு வேறு சட்டமா..! அர்ச்சுனா எம்.பி. கேள்வி
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21.10.2026) உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
திலீபனின் சிலை அகற்றம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அகிம்சை வழியில் போராடி உயிரிழந்த தியாக தீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரம் கடந்த சில வாரங்களாக தமிழர்கள் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கான வழக்கும் யாழ். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாட்சியங்கள் யாரும் வழக்கில் முன்னிலையாகவில்லை என நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி, சிலையை வைப்பதற்கு அனுமதி கோரிய கஜேந்திரன் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் சட்டத்திற்கு முன்னர் இதுவரை நிறுத்தப்படவில்லை.
சட்டம் அனைவருக்கும் சமம் எனக் கூறும் அரசாங்கம், இந்த விடயத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதற்கான காரணம் என்ன? அதேபோன்று, பொதுமக்கள் என வரும் பொழுது அரசாங்கம் வேறு விதமாகவும், அரசியல் தலைவர்கள் என வரும் பொழுது வேறு விதமாகவும் செயற்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது என்றார்.
நாமலின் பிரத்தியேகச் செயலாளர் வீட்டிற்குள் சுவரேறிக் குதித்துச் சென்ற பொலிஸார்! நள்ளிரவில் நடந்த சோதனை
YOU MAY LIKE THIS