நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த
ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.
இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்ஷவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.
மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார்.
பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..