அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்
நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..