நாமல் ராஜபக்சவின் கைது பின்னணி! மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் பரபரப்பு வாக்குமூலம்
கடந்த காலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமான கொள்வனவு ஒப்பந்த ஊழல் மோசடி தொடர்பான நீண்ட வாக்குமூலத்தின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த மோசடி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யும் ஏர்பஸ் (Airbus) ஒப்பந்த ஊழல் வழக்கில், நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன கடந்த மார்ச் 12 கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த வேளையில், கபில சந்திரசேன மே 08 அன்று மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
கைது செய்யப்பட்ட போது கபில சந்திரசேன நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மற்றும் அதன் பின்னணியில் பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்ன ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.
பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணை
இதற்கிடையில், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதற்காக, பிரான்ஸ் ஏர்பஸ் தாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாட்டிற்கு வருகை தந்து ஆணைக்குழுவின் முன்பும் வாக்குமூலங்களை அளித்திருந்தது.
இத்தகைய பின்னணியில், ஏர்பஸ் ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பாணையை தொடர்ந்து நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்வனவு ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (CIABOC) 2013 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening