அமெரிக்காவை சீண்டிய ஈரான் - அதிரடியாக பதிலடி கொடுத்த ட்ரம்ப் படைகள் - வெளியான காணொளி
அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் பல தாக்குதல்கள்
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலும் ஈரானின் பல தாக்குதல்களை வெற்றிகரமாகத் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, Kharg தீவு மற்றும் Jask கடற்பகுதிக்கு அருகில் இருந்த M/T Downy மற்றும் M/T Stark 1 ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
— U.S. Central Command (@CENTCOM) September 5, 2026
மேலும், சரக்கு ஏற்றப்படாத மற்றொரு எண்ணெய் கப்பலும் ஓமன் வளைகுடாவில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களும் IRGC மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிக்கும் இரகசிய எண்ணெய் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடையவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல்
அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Kharg தீவு அருகே அமெரிக்கா ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றைத் தாக்கியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கப்பல் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் ஈரானிய செய்தி நிறுவனமான Tasnim தெரிவித்துள்ளது.
ஈரான் OPEC அமைப்பில் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளதுடன், அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளில் பெரும்பகுதி Kharg தீவு வழியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.