பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள புதிய தகவல்
பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கோஸ் மல்லி" என்பவரிடம் வசூல் அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் உயிரிழந்தவரின் மகனையே குறிவைத்துச் சுட முற்பட்டுள்ளனர்.
தவறான இலக்கு
இருப்பினும், துப்பாக்கிதாரிகள் தவறான இலக்கைச் சுட்டதில், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே கைத்துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய "தெஹிவல சண்டோ" எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவராலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தப்பிச்சென்ற துப்பாக்கிதாரிகள்
அத்துடன் இந்தத் தாக்குதலை நடத்திய இரு நபர்களும் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening