மின்வெட்டு தொடர்பில் பரவும் வதந்திகள் - அரசத்தரப்பு வெளியிட்ட விளக்கம்
மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அனுர கருணாதிலக்க விளக்கம்
இந்த அறிவிப்பை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.

2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் அவர் இதன்போது ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.