சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்!

Colombo Namal Rajapaksa Bribery Commission Sri Lanka Airbus Bribery Scam
By Dhayani Sep 04, 2026 01:40 PM GMT
Report

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


ஆறாம் இணைப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today

ஐந்தாம் இணைப்பு 

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

நான்காம் இணைப்பு

சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். 

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today

மூன்றாம் இணைப்பு

சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டத்தரணிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து பல மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  


இரண்டாம் இணைப்பு

சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார். 

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோரிக்கைக்கு இணக்கம்

எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது 

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today   

மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்

இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்

சற்று முன்னர் கை விலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! | Namal Appears Before The Bribery Commission Today



GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US