முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மூன்றாம் இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
பொல்கொல்ல மகிந்த ராஜபக்ச மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காக தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையினை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (04) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.