பாடசாலைகளில் கடுமையான சோதனைகள்.. பெற்றோருக்கு விரைவில் கிடைக்கவுள்ள கருவிகள்!
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரிசோதனை கருவிகள்
போதைப்பொருள் பயன்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் விரைவுப் பரிசோதனை கருவிகளை (Drug-testing kits) மக்களுக்கு இலகுவாகக் கிடைக்கச் செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சந்தைகளுக்கும், நீண்டகாலத் திட்டமாக உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமும் இக்கருவிகளை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்க இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.