தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு இந்த அரசிலும் பாரிய நெருக்கடி!
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்துத் துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.
அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்: தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்!அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்... -
பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்
“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.
ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி.
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது.
தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.
You May Like THis Video..