இஸ்ரேலியத் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
தெற்கு லெபனானில் (ஹிஸ்புல்லா) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அலி அல்-தாஹிர் மலைத்தொடர் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தினால், அதற்கு எதிராக கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமான் நாட்டின் ஊடாக கடந்த மாதம் இந்த எச்சரிக்கை செய்தி வொஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட மலைத்தொடர் பகுதியில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் இணைந்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட உறுப்பினர்கள் சிலர் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்கு அழுத்தம்
இந்த நிலையில், அங்குள்ள நிலத்தடி கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியான முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இருப்பினும், இந்த பகுதி மீது முழு அளவிலான தாக்குதலை நடத்துவது ஜூன் மாதம் எட்டப்பட்ட உடன்படிக்கையை கடுமையாக மீறும் செயல் என ஹிஸ்புல்லா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அலி அல்-தாஹிர் பகுதியைக் கைப்பற்ற இஸ்ரேல் முயன்றால் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரேலிய படைகள் அந்தப் பகுதியைச் சுற்றி முற்றுகையிட்டு உணவு மற்றும் நீர் விநியோகங்களைத் தடுத்து வரும் அதேவேளை, நிலைமையை மேலும் தீவிரமடைய விடாமல் தவிர்க்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam