நேபாளத்தில் தீவிரமடையும் நிவாரணப் பணிகள்: உயிரிழப்பு 1,100 ஐக் கடந்தது என ஐ.நா அறிவிப்பு
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பேரழிவுமிக்க திடீர் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு காரணமாக உருவான இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் இதுவரை குறைந்தது 1,114 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பேரழிவு
திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்திருப்பதுடன், 540க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட பாலங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால், தொலைதூரக் கிராமங்களுக்கு இராணுவ வானூர்திகள் மூலமே உணவும் அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 12,000க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள போதிலும், நீர்மின் நிலையச் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேரழிவு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, இது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத ஒரு பேரழிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதகால அவசரநிலையை அறிவித்துள்ள நேபாள அரசு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 4 மாதகால சர்வதேச நிவாரணக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
46 தொழிலாளர்கள்
இந்தநிலையில், நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ரசுவாகாதி நீர்மின் நிலையத்தின் நிலத்தடிச் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 46 தொழிலாளர்கள் இன்னும் உயிருடன் இருக்கக் கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சுரங்கப் பாதையின் பாதுகாப்பான பகுதிக்குள் அவர்கள் சிக்கியிருப்பதாகவும், அங்கு உணவும் குடிநீரும் இருப்பதனால் அவர்கள் ஒரு வாரத்தின் பின்னரும் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நேபாள மின்சார சபையின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
279 பேர் பாதுகாப்பாக மீட்பு
ரசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த 111 மெகாவோட் மின் உற்பத்தி நிலையத்தின் சுரங்கங்களுக்குள் நேபாள இராணுவத்தினர் மற்றும் இந்திய, சீன சிறப்பு மீட்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை நீர்மின் திட்டப் பகுதிகளில் இருந்து 279 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி இயற்கை பேரழிவினால் நாட்டில் இதுவரை 1,114க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 600 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
எஞ்சியவர்களை மீட்கும் பணியில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவிகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan