முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்
கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று கினிகத்தேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவராகும்.

சந்தேகநபர் முறைப்பாட்டாளருடன் திருமணம் செய்திருந்தார். எனினும் சட்டப்பூர்வமாக பிரிந்திருந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.