நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஐ.தே.க கண்டன அறிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.