கைதாகியும் கைவிலங்குடன் சிரித்தபடி சிறை சென்ற நாமல்! கைதாவதை முன்கூட்டியே அறிந்தது எப்படி..
தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய விடயத்திலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் சுமார் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு மேலான இலஞ்சப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கபில சந்திரசேன சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதற்கு முன்னதாகவும் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அப்போதைய நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதை காண முடிகின்றது.
அதே சமயம் நாமல் ராஜபக்ச காலையிலிருந்து அமைதியான மற்றும் புன்னகைத்த முகபாவனையுடனேயே காணப்பட்டார்.
இந்த விடயங்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசுபோருளாகியுள்ள நிலையில், விரிவான விளக்கங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...