மத்திய கிழக்கு பதற்றம்: இராணுவச் சாதனங்களில் விளம்பரக் கண்காணிப்பு கருவிகளை முடக்கிய அமெரிக்கா
மத்திய கிழக்கில் இராணுவப் பயன்பாட்டிலுள்ள கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் காணப்பட்ட விளம்பரக் கண்காணிப்புக் கருவிகளை அமெரிக்க இராணுவம் முடக்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் நடமாட்டங்களை விளம்பர நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் இருப்பிடத் தரவுகள் வழியே எதிரிகள் கண்காணிப்பதாக எழுந்த தகவல்களை அடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விளம்பர அடையாளக் குறியீடுகள் மூலம் திரட்டப்படும் தனிநபர் தரவுகள் சந்தையில் விற்கப்படுவதால், போர் மண்டலங்களில் உள்ள படைவீரர்களின் இருப்பிடத்தை எதிரிநாடுகள் மிக இலகுவாகக் கண்டறியும் ஆபத்து உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
விசாரணை
இதன் காரணமாகவே அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் சிறப்புப் படைகள் தமது சாதனங்களில் இத்தகைய கண்காணிப்பு அம்சங்களை அண்மைக் காலத்தில் முடக்கியுள்ளன.

இருப்பினும், இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் அச்சுறுத்தலை முழுமையாகத் தடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், படைவீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் பென்டகன் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு மக்களுக்காக மீட்புக் குழுவை அனுப்பிய அவுஸ்ரேலியா - நேபாளத்தில் 5000 வெளிநாட்டவர்கள் மாயமானதாக தகவல்
YOU MAY LIKE THIS VIDEO..