நாட்டு மக்களுக்காக மீட்புக் குழுவை அனுப்பிய அவுஸ்ரேலியா - நேபாளத்தில் 5000 வெளிநாட்டவர்கள் மாயமானதாக தகவல்
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அவுஸ்ரேலிய அரசு சிறப்பு மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக திரிசூலி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கொடிய திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில், இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 583 வெளிநாட்டினர் உட்பட சுமார் 5,000 பேர் இதுரையில் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்ரேலிய மீட்புக் குழு
இந்த நிலையில் நேபாள அரசின் அவசர உதவி கோரிக்கையை ஏற்று, அவுஸ்திரேலிய பேரிடர் உதவி மீட்புக் குழு (ADART) களமிறக்கியுள்ளது.
இதில் நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த சிறப்பு ட்ரோன் விமானிகள் உட்பட 15 பேர் உள்ளடக்கப்படுகிறார்கள்.

மேலும், வானில் இருந்து பரந்த நிலப்பரப்புகளை ஆய்வு செய்யவும், மீட்புக் குழுவினர் நேரடியாகச் செல்ல முடியாத குறுகிய மற்றும் ஆபத்தான இடங்களுக்குள் சென்று தேடவும் கூடிய அதி நவீன ட்ரோன்கள் இந்த குழுவினரிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்குள் யாரேனும் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்த தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
“Life360” செயலியின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை
இதற்கமைய, ட்ரோன் குழுவைத் தவிர, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் (DVI) அவுஸ்திரேலிய கூட்டாட்சி 7 பொலிஸாரும், நிபுணர்களும் எதிர்வரும் சனிக்கிழமை நேபாளம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என ஏற்கனவே 19 அவுஸ்திரேலியர்கள் அங்கு முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் போன 36 அவுஸ்திரேலியர்கள், வெள்ளத்தில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 36 அவுஸ்திரேலியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இதனால் அவுஸ்திரேலிய அரசு மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் இடையே தீவிர கவலை நிலவி வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சில உறவினர்கள் “Life360”போன்ற செயலிகளின் இருப்பிடத் தரவுகளைக் கொண்டு நேபாளத்திற்கே நேரில் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.