சம்பள அதிகரிப்பு! நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்
உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 முதல் 70 ரூபா வரை குறைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.
உரிய சம்பள அதிகரிப்பு இல்லை
பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் இரட்டைச் சுமைகளுக்குள் உள்ளாகியுள்ளனர்.

மேலும், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றனர்.
இவ்வாறான பல்வேறு நெருக்கடி நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS..