NPP அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு! நாளை 2 பிரமாண்ட பேரணிகளில் உரையாற்றும் ஜனாதிபதி அநுர
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை( 6) இரண்டு முக்கிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில் “நமது அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகள் — நாட்டிற்கு நல்லது” (අපේ ආණ්ඩුවට වසර දෙකයි – රටට සුබයි) எனும் கருப்பொருளின் கீழ் இந்த பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2 பிரமாண்ட பேரணிகள்
மேலும் இந்த கூட்டங்கள் முறையே புலத்சிங்களவில் பிற்பகல் 2:00 மணி மணிக்கும், பேருவளையில் பிற்பகல் 3:30 மணி மணிக்கும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செப்டம்பர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டங்களில் ஜனாதிபதி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.