லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு விலை
இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, செப்டெம்பர் மாதத்திலும் குறித்த விலைகளிலேயே லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.