வெளிநாட்டில் பணியாற்றும் தாய் - 14 வயது மகனின் விபரீத முடிவு
காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவனின் தாயார் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவன் கடிதம்
அண்ணன் திட்டியதால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

அவரது தம்பி வீட்டில் இல்லாததால், அண்ணன் தேடிய நிலையில் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக பட்டபொல வைத்தியசாலைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்ட போதும் செல்லப்பட்டதுடன், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan