இலங்கையில் 75 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள ஆபத்தான மாற்றம்
இலங்கையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிலைமை மிகவும் தீவிரமாக மாறும் அபாயம் உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 75 வருடங்களுக்குள் ஏற்பட்ட எல் நினோ நிலைமைகளை விடவும் மிகவும் தீவிரமான நிலைமை இந்த ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோ
இந்த எல் நினோ நிலைமையானது படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் மிகவும் தீவிரமான எல் நினோவாக மாறுவதற்கான வாய்ப்புகள் 90 வீதத்திற்கும் அதிகமாகவுள்ளதாக உலகளாவிய தரவுகள் காட்டுகின்றன.
இது கடந்த 75 வருடங்கள் இல்லாத ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு முதல் இதுவரை ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது இந்த எல் நினோ நிலைமையானது ஏனைய அனைத்து எல் நினோ நிலைமைகளையும் விட மிகவும் தீவிரமானதாக மாறுவதற்கான சாத்தியக்கூறு தற்போது 70 சதவீதத்திற்கு அருகில் கணிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam