சிறைச்சாலை நெருக்கடிக்கான தீர்வு! ராகுல தேரர் வலியுறுத்தும் முக்கிய விடயம்
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 45,000 பேர் தற்போது சிறைச்சாலைகளில் இருப்பது ஒரு பாரதூரமான நிலை என்று பொகவந்தலாவ ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர்,
இவ்வளவு பெரிய எண்ணிக்கை சமூகத்தில் நிலவும் ஒழுக்கச் சீரழிவைச் சுட்டிக்காட்டுகிறது. குற்றம் செய்தவர்களைச் சிறையில் அடைப்பது அல்லது தூக்குத்தண்டனை வழங்குவது மட்டும் நிரந்தரத் தீர்வல்ல.
சட்டத்தின் மீதான பயம் தேவை என்றாலும், தனிமனிதனின் மனமாற்றமே முக்கியமானது.
பல இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் போதிய நேரம் செலவிடாததும், அவர்களைச் சரியாக வழிநடத்தாததும் முக்கிய காரணம்.
சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் சமூகத்தின் அடிமட்டக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தாலேயே நிகழ்கின்றன என்றும், குடும்ப அமைப்பைப் பலப்படுத்தி அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்குவதே இதற்கான தீர்வாகும் என்று குறிப்பிட்டார்.
முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம்! தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை