ஆன்மீக வழிகாட்டிகளால் பாதிக்கப்படும் சிறுமிகள்..! மதகுருக்கள் மீது அடுத்தடுத்து அதிர்ச்சிக் குற்றச்சாட்டுகள்
ஆன்மீக வழிகாட்டிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதகுருக்கள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மதப்போதகர்களாகச் செயற்பட்டு வரும் பிரபல கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகக் கூறி, திரைமறைவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நபர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகக் கருதப்படுகின்றது.
இதற்கமைய, கொழும்பில் இயங்கிவரும் பிரபல தேவாலயம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர், 14 வயதுச் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் முறைப்பாடு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்கப்படுவதன் மூலமே சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிப்படுத்த முடியும்.
மதத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தேரர்கள் மற்றும் ஆலயக் குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான பல்வேறு சம்பவங்களை உரிய ஆதாரங்களுடன் உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகின்றது இன்றைய News Insight நிகழ்ச்சி,