ஷிரந்தியை நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்தமை தொடர்பில் மொட்டு கட்சி விளக்கம்
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை நிதி குற்ற விசாரணைப் பிரிவு (FCID) விசாரணைக்காக அழைத்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ச, “சிரிலிய சவிய” அறக்கட்டளை தொடர்பானதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிராந்தி சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன.
2015 ஆம் ஆண்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே, சிரிலிய சவிய அறக்கட்டளையின் அனைத்து கணக்குப் பதிவுகள், புத்தகங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்து பாதுகாப்பில் எடுக்கப்பட்டிருந்தன என ஸ்ரீலங்கா பொதுஜன முனன்ணி கட்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.