மாணவர்கள் படுகொலை: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்கள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
புகைப்படங்கள் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த(06.07.2023)ஆம் திகதி காணாமல் போன பிஜாம் ஹெம்ஜித்(20), ஹிஜாம் லிந்தோயிங்கம்பி(17) ஆகிய இரு மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நள்ளிரவிலும் போராட்டம்
இந்த புகைப்படத்தில் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Manipur needs attention.
— Mahua Moitra Fans (@MahuaMoitraFans) September 26, 2023
Mr Prime Minister, Are you there? pic.twitter.com/uOYJByl8Vx
இந்த இரண்டு மாணவர்கள் படுகொலைக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்தில் பல பகுதிகளில் நள்ளிரவிலும் இந்தப் போராட்டம் நீடித்துள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தியதோடு மணிப்பூரில் கல்வி நிறுவனங்கள் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
