லண்டனில் இலங்கையர் உட்பட 7 பேர் கைது - நாடு கடத்த நடவடிக்கை
பிரித்தானியாவில் லண்டன் உட்பட பல பகுதிகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இலங்கையர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையின் கீழ், பிரித்தானியாவில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் சீண்டல்
குறித்த நபர் சிறுவர் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவராகும்.

சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் முன்னெடுத்த மிகப்பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையில், பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகவரகம் இணைந்து செயற்பட்டது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவில் நுழைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை இலக்கு வைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அதற்கமைய, 30 வயதுடைய இலங்கையர் லிவர்பூல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.