யாழில் சமூக வலைத்தளங்களின் மூலம் மோசடி: பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் சுமார் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் நேற்று (27.12.2023) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இணையம் மூலம் முதலீடு செய்து பணம் ஈட்டலாம் என்று ஆசையூட்டப்பட்டே இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முறைப்பாடு
சமூக வலைத்தளங்கள் மூலமே இந்தத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு ஏமாற்றப்பட்ட இருவர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒருவர் சுமார் 20 லட்சம் ரூபாவையும், மற்றையவர் சுமார் 6 லட்சம் ரூபாவையும் இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்ப டுகின்றது.
சமூகவலைத்தளங்கள் மூலம் மேற் கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
