முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு 'மொட்டு' சவால்
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக வக்கும்புர,
மொட்டுக்கு சவால்
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்துவிட்டது. எனினும், மாகாண சபைத் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. அது நடத்தப்பட வேண்டும்.
அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
எதிரணிகள் ஒன்றிணைந்து கோரினால் தேர்தலை நடத்தத் தயார் என அரச தரப்பில் கூறப்பட்டது. ஒன்றாக அல்ல தனித்துப் போட்டியிடுவதற்குக் கூட நாம் தயார்.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம். அரசு கூறுவதை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை என்பது தேர்தல் மூலம் நிரூபணமாகும்" என குறிப்பிட்டுள்ளார்.



