ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டம் ஆரம்பம் - மொட்டுக் கட்சி ஆருடம்
ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்து வருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்களில் 95 சதவீதமானோர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மீண்டும் கட்சிக்குத் திரும்பியுள்ளனர்.
கட்சியைப் பலப்படுத்தி
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு நாமல் ராஜபக்ச தற்போது நேரடி விஜயம் மேற்கொண்டு சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்.
கட்சியைப் பலப்படுத்தி, ஆட்சியைப் பிடிப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



