கனேடிய அரசாங்கத்தினால் புலம்பெயர்ந்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா (Canada) நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் புலம்பெயர்ந்தோர் (Immigrant) அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் என கனேடிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வசிக்கும் ஒரு குடியேற்றவாசி கனேடிய சமூகம் ஏற்றுக்கொள்ளாத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் கனேடிய அரசாங்கத்துக்கு உள்ளது.
இவ்வாறு கனடாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒருவரை வெளியேற்றக்கூடிய காரணிகளை கண்டறிவது ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் முக்கியமானது ஆகும்.
பின்வரும் காரணிகளுக்காக புலம்பெயர்ந்த ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்படலாம்.
ஆள்கடத்தல் அல்லது கொலை
கனடாவில் பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றத்தை செய்வதால் புலம்பெயர்ந்த ஒருவர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம்.
உதாரணமாக ஆள்கடத்தல் அல்லது கொலை போன்ற குற்ற செயல்களுக்கு இவ்வாறான தண்டனை கனடாவில் வழங்கப்படுகின்றது.
திருட்டு
துப்பாக்கியை பயன்படுத்தாமல் 5,000 கனேடிய டொலருக்கு மேற்பட்ட பணத்தை ஒருவர் கொள்ளையடித்தல் என்பது கனடாவில் வதிவிட தகுதியை மீளப்பெறும் ஒரு குற்றச்செயல் ஆகும்.
அதேவேளை, துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திருட்டு மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகின்றது.
அத்துடன், பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து தப்பிக்க முயல்வதும் கனடாவில் வதிவிட தகுதியை கேள்விக்குறியாக்கும் குற்றச்செயலாக உள்ளது.
போதையில் வாகனம் செலுத்துதல்
மதுபோதையில் அல்லது போதைப்பொருட்களை பயன்படுத்தி விட்டு வாகனம் செலுத்துவது கனடாவில் இருந்து குடியேற்றவாசி ஒருவரை அந்நாட்டிலிருந்து அகற்றக்கூடிய மற்றுமொரு குற்றச்செயலாகும்.
கனேடிய அரசானது மேற்குறிப்பிட்ட குற்றச்செயலுக்கு 2018ஆம் ஆண்டு முதல் சகிப்புத்தன்மை அற்ற கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.
போதைப்பொருள் வர்த்தகம்
கனடாவிலிருந்து குடியேற்றவாசியை நாடு கடத்துவதற்கான மற்றுமொரு பிரதான காரணியாக போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகம் உள்ளது.
அத்துடன், குடியேற்றவாசி போதைப்பொருளை உற்பத்தி செய்வதும் கனடாவில் கடுமையான குற்றச்செயலாக கருதப்படுகின்றது.
போர்க்குற்றங்கள்
மேலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதும் புலம்பெயர்ந்தோரின் வதிவிட தகுதியை இழக்க செய்யும் குற்றச்செயலாக உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கனடாவில் மீள் குடியேற்ற தகுதியை இழக்கும் ஒருவர் மீண்டும் கனடாவிற்கு செல்ல விரும்பினால் அவர் கனடாவுக்குத் திரும்புவதற்கான அங்கீகாரத்தினை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
