பல்வேறு திட்டங்களுடன் இந்தியாவுக்கு பயணிக்கவுள்ள எலோன் மஸ்க்
பல பில்லியன் டொலர்கள் முதலீட்டு திட்டங்களுடன் டெஸ்லாவின் (Tesla) தலைமை நிர்வாக
அதிகாரியான எலோன் மஸ்க் (Elon Musk), இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு (India) பயணிக்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான (Narendra Modi) சந்திப்பு மற்றும் முதலீட்டு நிகழ்ச்சிகளுக்காக அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவுதல் தொடர்பான அறிவிப்பு எலோன் மஸ்க் மற்றும் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் விவாதப் புள்ளியாக இருக்கும் என்று சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு உறுதிப்பாடுகள்
இந்நிலையில், பிரதமர் மோடி ஏப்ரல் கடைசி வாரத்தில் டெல்லியில் எலோன் மஸ்க்கை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இந்தியாவிற்கான டெஸ்லாவின் திட்டங்கள், முதலீட்டு உறுதிப்பாடுகள் மற்றும் புதிய உற்பத்தி வசதிகளை தொடங்குதல் தொடர்பான விபரங்கள் உட்பட தனித்தனியான அறிவிப்புகளை வெளியிட மஸ்க் இந்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 3 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
