உலகில் தவிர்க்க முடியாத ஆபத்து! கலக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள்
ஈரானுக்கும் (iran) இஸ்ரேலுக்கும் (israel) ஒரு யுத்தம் ஆரம்பித்துவிட்டால் அந்த யுத்தம் வெறுமனே இரு நாடுகளுக்குள் மாத்திரம் தாக்கம் செலுத்தாது. அது ஒரு பிராந்திய யுத்தமாகவோ அல்லது உலக யுத்தமாகவோ மாறிவிடுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (hamas) ஆகிய இரு தரப்பினருக்கு இடையில் நடைபெற்றுவந்த யுத்தம், ஈரான் பக்கம் திரும்புவதற்கான முக்கிய காரணம் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வுதான்.
கடந்த வாரம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணைத்தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டதுடன் அதில் ஈரான் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னணியில் ஈரான் பதில் தாக்குதலை இஸ்ரேல் மீது மேற்கொண்டால் அந்த தாக்குதல் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் இருக்கின்றனர்.
இதுபோன்ற விடயங்களை ஆராய்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,