அயதுல்லா அலி கமேனி படுகொலை! வீதிக்கு இறங்கி கூச்சலிடும் ஈரானியர்கள்..
ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீதிகளில் இறங்கி துக்கம் அனுஷ்டிக்கும் வகையிலான காணொளிகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் பார்ஸ் செய்திச் சேவை இது தொடர்பான காணொளிகளை வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் போராட்டம்
இதேவேளை, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கமேனியைக் கொன்றது ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் போராட்டங்களைத் தூண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகரின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை எதிர்த்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் எதிர்ப்பாளர்கள் கொடிகளை அசைத்து, கோஷங்களை எழுப்புவதோடு, அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் அணி திரள்வதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🎥 تجمع بجنوردیها در میدان مرکزی شهر pic.twitter.com/bk6FhdObQJ
— خبرگزاری فارس (@FarsNews_Agency) March 1, 2026




Photo courtesy - Al Jazeera
மத்திய கிழக்கு போர் சூழல்! கேள்விக்குறியாகும் இலங்கையர்களின் பாதுகாப்பு - அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam