ஜேர்மனியில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
ஜேர்மனி, குமார்ஸ்பார்க் நகரத்தின் (Gummersbach) சமூக ஜனநாயகக் கட்சியின் ( Social Democratic Party -SPD) வருடாந்த பொதுக்கூட்டத்தில், குமார்ஸ்பார்க் நகரத்தின் (Gummersbach) உள்ளூர் சங்கத்தின் புதிய தலைவராக (Chairman) மேரி ரொஷானி தனபாலசிங்கம் (Mary Roshani Thanapalasingham) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த தலைமை பதவி தேர்வுக்காக நடாத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தமையினால் அவர் தலைவராக தேர்வாகியுள்ளார்.
அதற்கமைய, சங்கத்தின் உள்ள உறுப்பினர்களில் 23 உறுப்பினர்கள் ஆம் எனவும் 3 உறுப்பினர்கள் இல்லை எனவும் வாக்களித்துள்ள அதேவேளை, 1 உறுப்பினர் வாக்களிக்கவில்லை.
அறிமுக உரை
அவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தனது அறிமுக உரையில், எதிர்வரும் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் குமார்ஸ்பார்க் நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி முன்னெடுக்கவேண்டிய முக்கியமான பணிகளை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
மேலும், அவர் கட்சிப் பணிகளை விரைவாக தொடங்க விரும்புவதோடு, மே மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் திட்டமிடல் தொடர்பான கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
