இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாரிய மோசடி: பெண் உட்பட இருவருக்கு அதிரடி உத்தரவு
இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் இயக்குநரும் செயலாளரும் வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
55 வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பாரியளவிலான பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரகோ ஒன்லைன் நிறுவனத்தின் பணிப்பாளரான 25 வயதான எரந்த டில்ஷான் சமரஜீவ மற்றும் செயலாளரான 23 வயதான ஹன்சிகா செவ்வந்தி ஆகியோருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தடை விதித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மற்றும் அமலாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் செய்த முறைப்பாடு தொடர்பில், வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு பேரின் வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பலரிடம் விசாரணைகள்
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.