ஆபத்தான நிலையில் சாந்தன்: தாயாரின் உருக்கமான கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யாழ். பருத்தித்துறையில் உள்ள சாந்தனின் தாயார் முதுமையின் இறுதித் தருணத்தில் நாட்களை எண்ணிக்கொண்டு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனை காண காத்திருப்பதாக வழக்கறிஞர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே ஒரு கோரிக்கை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சாந்தன் தற்போது முதுமை நிலைக்கு சென்றுள்ளதாகவும் 50 களில் உள்ள மனிதன் தற்போது 80 களில் இருப்பவர்கள் போல் தோற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளான சாந்தனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் மோசமான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், “நான் எனது சொந்த நாட்டுக்கு சென்று விடுகிறேன், எனது தாயாரை பார்க்க விரும்புகிறேன்” என்ற ஒரே ஒரு கோரிக்கையை மாத்திரமே சாந்தன் முன்வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஜான்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகரித்ததால் திருச்சியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கல்லீரல் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளான சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்: சிறீதரனிடம் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |