சாந்தன் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதி
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்று (27.1.2024) சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கல்லீரல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோசமான உடல்நலக் குறைவால் திருச்சி அரச மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
