சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அன்னசத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் காரைநகர் கிழவங்காடு கலா மன்றத்தின் இசை அரங்கமும், திருவாசகக்குயில் லீலாவதி இராசரத்தினத்தின் பண்ணிசையும் இடம்பெற்றது.
அதேவேளை உதவிகளாக, பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக 200 பயனாளிகளுக்கு தேவையான விவசாய உள்ளீடுகளிற்கான நிதியாக ரூபா 40,000 வழங்கிவைக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
அத்துடன் பண்டாரவளை - ப/ கிரேக் தமிழ் மகாவித்தியாலயத்தின் பயன்பாட்டிற்காக ரூபா 58,000 பெறுமதியான அச்சு இயந்திரம் ஒன்றும் பாடசாலை முதல்வர் எஸ்.சவுந்தரராஜனிடம் வழங்கப்பட்டது.
மேலும், காரைநகர் கிழவன்காடு கலாமன்ற தலைவர், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அன்னசத்திரம் மோகனதாஸ் சுனாமிகளால் கலாமன்றத்திற்கு ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நிர்வாகிகள், சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், காரைநகர் கிழவன்காடு கலா மன்றத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.