லொறியொன்று வானுடன் மோதி விபத்து: ஒருவர் பலி - 20 பேர் வைத்தியசாலையில்...
நுவரெலியா - நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (01) மாலை 06.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று ஹட்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல குறுக்கு வழியாக நுவரெலியா நோக்கி சென்ற வான் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் தடையாளி முறையாக இயங்காமை காரணமாக ஏற்பட்ட இயந்திர கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல் - திவா ( செய்தி, புகைப்படங்கள் )
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
