ஹட்டன் டிப்போவிற்கு கிடைத்துள்ள பாரியளவு தீபாவளி வருமானம்
ஹட்டன் (Hatton) டிப்போ இம்முறை தீபாவளி வருமானமாக ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் ஹட்டனை நோக்கி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக, விசேட பேருந்து சேவைகள் ஹட்டனிலிருந்து மலையக நகரங்களுக்கும் தலைநகரத்திற்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பேருந்து கட்டணம்
இந்நிலையில், கடந்த 27ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை குறிப்பிட்ட வருமானத்தினை ஈட்டியுள்ளதாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த கால தீபாவளியினை ஒப்பிடும் போது இம்முறை வருமானம் குறைந்துள்ளதாகவும் அதற்கு கொழும்பிலிருந்து ஏனைய காலங்களில் வந்த அளவுக்கு இம்முறை வருகை தரவில்லை என்றும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டமையும் காரணம் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில் கடந்த 27ஆம் திகதி 26,79,384 ரூபாவும் 28ஆம் திகதி 29,29,280 ரூபாவும் 29ஆம் திகதி 33.77.102 ரூபாவும் 30ஆம் திகதி 34,71211 ரூபாவும் 31ஆம் திகதி 39.79,812 ரூபாவும் வருமானமாக பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
