சம்பந்தன் தமிழரின் அடையாளம்! பதவி விலக்க துடிப்போருக்கு விக்னேஸ்வரன் பதிலடி

M A Sumanthiran R. Sampanthan Sri Lankan political crisis C. V. Vigneswaran
By Rakesh Oct 31, 2023 06:00 AM GMT
Report

சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வெளியிட்ட  கேள்வி - பதில் அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

இதன் முழு விவரம் வருமாறு:-

கேள்வி:- சம்பந்தன் பதவி விலகல் சம்பந்தமான விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் நாடாளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் நாடாளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

வடக்கு - கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவதுதான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு.

 வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம்

தமிழ் மக்களின் வருங்காலம் நாடாளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை.

சம்பந்தன் தமிழரின் அடையாளம்! பதவி விலக்க துடிப்போருக்கு விக்னேஸ்வரன் பதிலடி | Sambandan Is The Identity Of A Tamil

ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின் அரசாங்கத்துக்குப் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.

இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்தார். அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும். அவரைப் புறக்கணிக்கவோ - நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே - அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும்.

வெளி உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ - நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும்.

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

அவர் வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை. அவரில் பல குறைகள் இருந்துள்ளன - இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி வெளிவந்து விடுவன.

இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை என்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய நாடாளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க - பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும்.

சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : நாளை முதல் வங்கிக் கணக்கிற்கு பணம்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு : நாளை முதல் வங்கிக் கணக்கிற்கு பணம்

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்தால் ஒரு இலட்சம் தண்டம்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US