கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்
கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மயக்கமடைந்த நிலையில் அவரது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வழங்கிய பாதி புகைத்த சிகரெட்டை புகைத்தவுடன் அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவரது கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றை அபகரித்துச் சென்றுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் கொள்ளை
திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 432,000 ரூபா என பொலிஸ் கான்ஸ்டபிளின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மிஹிந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்காக கொழும்பு வந்துள்ளார்.
பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், கழிவறைக்கு அருகில் நின்ற இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை புகைத்தமையால் மயக்கத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
